சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு 25,000 உதவித்தொகை கிடைத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இதுவரை உதவித்தொகை கிடைக்காத நபர்கள் தங்களுக்குரிய பிரதேச செயலகங்களைத் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் உதவிச் செயலாளர் ஜெயதிசி முனசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான15,000 உதவித்தொகை வழங்குவது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


















