இலங்கையின் நெல் மற்றும் தேங்காய் உற்பத்தி கடந்த ஒகஸ்ட் மாதத்தில் அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேநேரம் தேயிலை, இறப்பர் மற்றும் மீன் உற்பத்தி குறைவடைந்ததாகவும் மத்திய வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் விதைக்கப்பட்ட பரப்பின் அடிப்படையில், சிறுபோகத்திற்கான நெல் உற்பத்தி 2.21 மில்லியன் மெட்ரிக் தொன்னாக இருக்குமெனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகை முன்னைய சிறுபோக பருவத்தை விடவும் 11.9 சதவீத அதிகரிப்பாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தேங்காய் உற்பத்தி 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் 17.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மீன் உற்பத்தி 10.7 சதவீதம் குறைந்துள்ளது. அத்துடன் தேயிலை உற்பத்தி கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 7.8 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


















