-சு.பாஸ்கரன், த.அம்பிகாவதி-
நோர்வே நாட்டின் VGS உயர்நிலைக் கல்லூரி மாணவர்களின் நிதி அனுசரணையில் RAHAMA மற்றும்FORUT நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் வேம்போடுகேணி, கச்சார்வெளி, கோவில்வயல், கிளாலி, முகமாலை அல்லிப்பளை ஆகிய கிராமங்களில் நலிவுற்ற குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வு முகமாலை சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் செ.நாகசெல்வன் தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முகமாலை கிராம செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 20 தற்காலிக வீடுகள், 20 மலசலகூடங்கள், 4 கிணறுகள் மற்றும் வறிய கல்வி கற்கும் மாணவர்களுக்கு 12 துவிச்சக்கர வண்டிகளும் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து வழங்கப்பட்ட நலத்திட்டங்களை பார்வையிடும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் RAHAMA மற்றும் FORUT நிறுவனங்களின் பிரதிநிதி ANE , பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் , நோர்வே நாட்டின்Asane Folk High School ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பயனாளிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றினர்.


















