பிலியந்தலை – கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டப் பந்தயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பந்தயங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கெஸ்பேவ மாற்று வீதிக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு வருமாறு வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, குறித்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு வந்து இவ்வாறு சட்ட விரோதமான முறையில் போட்டிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராம மக்களின் உதவியுடன் பந்தயம் நடைபெறும் காட்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டன. பின்னர் வீதியை மறித்து இந்த இளைஞர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது சிலர் தமது மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.


















