கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கிருந்த இரண்டு பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு மத்திய குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆவர். இந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கிருந்த இரண்டு பணியாளர்களிடம் அவர்களது கைடயக்கத் தொலைபேசிகளை கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதன்போது, இரண்டு பணியாளர்களும் தங்களது கைடயக்கத் தொலைபேசிகளைத் தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்த இரண்டு பணியாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்களான இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


















