-திருமலையில் ஒருவர் கைது-
திருகோணமலை, சேருநுவர பகுதியில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டது .
கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பொலிஸார் சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் மணல் களஞ்சியசாலை ஒன்றினை முற்றுகையிட்டனர்.
இதன்போது, எவ்வித சட்டபூர்வமான அனுமதிப்பத்திரமும் இன்றி, மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இனடறு மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















