பயிர்ச் சேதத்திற்கு இழப்பீடாக 1640 மில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
இலவசப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல், சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயா பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 95,128 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட 79,602 விவசாயிகளுக்கு விவசாய காப்பீட்டு இழப்பீடாக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளம், கனமழை, வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் சேதமடைந்த பயிர்களுக்கும், நோய்கள், பூச்சிகள் மற்றும் காட்டு யானை சேதம் போன்றவற்றால் சேதமடைந்த பயிர்களுக்கும் காப்புறுதித் தொகை வழங்கப்படுகிறது
அத்துடன் விவசாயிகளிடம் இருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் பயிர் சேதத்திற்கான இழப்பீட்டை அரசாங்கமே ஏற்கின்றனமை குறிப்பிடத்தக்கது.


















