கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக இருந்த கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி குழந்தையொன்றைப் பிரசவித்த சம்பவம் இடம்பெற்றது.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுமியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளதாக கேகாலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பாடசாலை மாணவியின் தந்தை சில காலத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். அதன் பின்னர் சிறுமியின் தாயார் தங்கள் பிரதேசத்தில் உள்ள சிறிய தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறித்து, சம்பாதிக்கும் சிறிய தொகைப் பணத்தில் சிறுமியையும், மூத்த சகோதரனையும் பராமரித்து வந்தார்.
சிறுமியின் சகோதரன் வேலைக்காக கொழும்பிற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தான் இதற்கு முன்னர் ஒரு பாடசாலை மாணவருடன் காதல் உறவு வைத்திருந்ததாகவும், பின்னர் அதை நிறுத்திவிட்டதாகவும் கூறிய சிறுமி, இருப்பினும் தான் பெற்ற குழந்தை அந்த உறவின் விளைவுதான் என்பதை நேற்று வெளிப்படுத்தினார்.
சிறுமி அன்றைய தினம் காலையில் குழந்தையைப் பிரசவிக்கும் வரை தனது மகள் கர்ப்பமாக இருந்ததை தாய் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தை தற்போது கேகாலை பொது வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுக்குட்பட்ட குறைமாதக் குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
அத்துடன், நடைபெறும் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு இந்த பாடசாலைச் சிறுமிக்கு வாய்ப்பளிக்கும் நோக்குடன், வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று அந்தச் சிறுமியை வைத்தியசாலையிலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் குழந்தை பிரசவிக்க காரணமாக இருந்த காதலனை பொலிஸார் தேடி விசாரணை நடத்தி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

















