பலாங்கொடையில் உள்ள நொன்பரீல் தோட்டம் காட்டுப் பகுதியில் தொடர்ச்சியாக காட்டுத் தீ பரவி வருகின்றது.
இந்தக் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயினால் ஏற்கனவே ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து இராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தாலும் தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.


















