பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் இருவரை நுகேகொடை வலய குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒருசில மாணவர்களுக்கும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் அந்த இருநபர்களும் ஹெரோயின் போதைப்பொருளை வழங்க வந்துள்ளனர். குறித்த இருவரும் 10 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதி அருகே சந்தேகத்திற்கிடமான முறை யில் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.


















