சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 50 முதல் 55 வயதுடையவர் எனவும், சுமார் 5 அடி 7 அங்குல உயரம் கொண்ட மெல்லிய உடல் அமைப்பை கொண்டவர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், குட்டையான, வெள்ளை தலைமுடி கொண்டவர் எனவும், முகம் முழுவதும் தாடி உள்ளதாகவும், ‘ஹிதுமதே ஜீவீத்’ என பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சடலத்தில் காயங்கள் எதுவும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















