-அனுமதி வழங்கியது அமைச்சரவை-
பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், ஒரு மாணவிக்கு தலா 1440 ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும். தலா 720 ரூபா பெறுமதியான இரண்டு பெறுமதிச் சீட்டுகள் ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்படும். மாணவிகள் தமது விருப்பத்திற்கேற்ப பின்வரும் முறைகளில் சுகாதார துவாய்களை கொள்வனவு செய்யலாம்.
இதனடிப்படையில்,தலா 120 ரூபா பெறுமதியான 08 அணையாடைகள் கொண்ட 12 பக்கெட்டுகள், அல்லது, தலா 180 ரூபா பெறுமதியான 10 சுகாதார துவாய்கள் கொண்ட 08 பக்கெட்டுகள் இத்திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவிகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வருடம் முழுவதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால் 1.5 மில்லியன் அளவிலான மாணவிகள் பயனடைவார்கள். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.


















