கொழும்பு – பொரள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
டோசர் இயந்திரம் ஒன்று குறித்த பாடசாலையின் மதில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலையின் மதில் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, அங்கிருந்த மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


















