வத்தளை, கெரவலப்பிட்டிய, ரத்னவலி விகாரைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியில் வைத்து பிக்குனி ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 67 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் இருவரும் குறித்த பிக்குனியை ஆபாச வார்த்தைகளால் திட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















