நியூசிலாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள இந்த பயணத்தில் இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா – நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று மைல்கல் எனக் கூறியுள்ளார்.
இது இரு நாடுகளின் கூட்டுறவுக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், நியூசிலாந்து மக்கள் என் மீது காட்டிய பாசம் நெகிழ்ச்சியூட்டுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் உலக நல்வாழ்விற்கான கூட்டுப் பணியை மேம்படுத்தும் என்றும் அவர் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளார்.

















