பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் சுவிஸ்ஸர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமிவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பலதரப்பு ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்ட முற்போக்கான சர்வதேச ஒத்துழைப்புக்கான அர்ப்பணிப்புக்கள் பரிமாற்றப்பட்டதாக பரா ரூமி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் வழக்கமான பரிமாற்றம் மிகவும் மதிப்புமிக்கது. அதே சமயம், நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், கொள்கை ரீதியான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், அர்த்தமுள்ள அரசியல் உரையாடலை முன்னெடுப்பதற்கும் பங்களிப்பு செய்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


















