சொரணதொட்ட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பு வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி மூன்று வாக்குகளால் தோல்வியடைந்தது.
அதன்படி, இன்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்புக்காக இடம்பெற்ற விவாதத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


















