நாட்டில் கடந்த திங்கட்கிழமை மாத்திரம் ஆறு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் 5 சம்பவங்கள் காதல் உறவுகளினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் ஆனமடுவ, தெபுவன, கண்டி, கம்பளை, களுத்துறை பயாகலை, அம்பாறை தமன ஆகிய பிரதேசங்களில் இருந்து இந்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12,14,15 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பிள்ளைகளின் நாளாந்த செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.















