-பிரதமர் ஹரிணி அமரசூரிய-
பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட கல்வி சார்ந்த விஜயத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவிக்கையில்
ஒரு நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் பெரிதும் மதிக்கிறது.
ஆசிரியர்களின் தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும், தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் கல்விச் சபை ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு இடையிலான உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய பெலியத்த ரு{ஹணு விஜயபா தேசிய பாடசாலை மற்றும் அதன் ஆரம்பப் பிரிவுக்குச் சென்று, 2026 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயிற்சிப் புத்தகங்கள், அடிப்படை பாடத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த விஜயத்தில் பிரதி அமைச்சர்களான ருவன் செனரத் மற்றும் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர் அதுல வெலந்தகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



















