உடுதும்பர – தம்பகஹபிட்டிய பகுதியில் இளம் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் குடிக்கக் கொடுத்துவிட்டு, பின்னர் தானும் அந்த விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் தாய் உயிரிழந்துவிட்ட அதேவேளை, விஷத்தை உட்கொண்ட அவரது மூன்று பிள்ளைகளும் உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் 32 வயதுடையவர் எனவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அத்தோடு, அந்தப் பெண்ணின் 34 வயதான கணவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

















