-சு.பாஸ்கரன்-
முல்லைத்தீவு – பனிக்கன்குளம் பகுதியில் புகையிரத பாதைக்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுமுன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளது.
சுடலமாக மீட்கப்பட்ட நபர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் அடையாளம் காணப்படவில்லை என கூறியுள்ள பொலிஸார், அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.














