புத்தாண்டு வாழ்த்துகளுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சஜித் பிறேமதாஸ இடையிலான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸவுக்கு அழைப்பை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாசவும் தனது அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது இருவரும் கலந்துரையாடினர்.
இந்த வாழ்த்துப் பரிமாற்றமானது புத்தாண்டில் ஒரு புதிய அரசியல் ஆரம்பமாக அமையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


















