-சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன-
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை அமர்வுகளின் போது பயன்படுத்திய பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நிலையியல் கட்டளை 82.1 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு முரணான மொழியைப் பயன்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய இத்தகைய வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திங்கட்கிழமை அமர்வின் போது பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தியது குறித்து விசாரிக்குமாறு பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.


















