பேலியகொட – மீகஹவத்த பகுதியில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் கூரிய ஆயதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்வம் நேற்று இடம்பெற்றது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிந்துள்ளது.
இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட வத்தளை – ஒலியமுல்ல பகுதியை சேர்ந்த 38 வயதான நவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரும் படுகாயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
புறாக்கள் தொடர்பான தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















