புத்தளம் – சிலாபம் பிரதேசத்தில் பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து அவர்களை நிர்வாணமாக காணொளி எடுத்ததாக கூறப்படும் மருந்தக உரிமையாளர் சிலாபம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மருந்தக உரிமையாளரின் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 571 போதைமாத்திரைகளும், 11 கிராம் 760 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட மருந்தக உரிமையாளர் போதைப்பொருளுக்கு அடிமையானர் என வைத்திய பரிசோதனைகளில் வெளியாகியுள்ளது.
சந்தேக நபரான மருந்தக உரிமையாளர் தனது சகோதரனான வைத்தியரின் உதவியுடன் இந்த குற்றச் செயலை நீண்ட காலமாக செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருந்தக உரிமையாளருக்கு உடந்தையாக இருந்த வைத்தியர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் சிலாபம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















