பேரிடரினால் 800 வரையான சமய ஸ்தலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
தெல்தோட்டைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் முனீர் முளப்பர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தெல்தோட்டைப் பொதுப் போக்குவரத்து சேவையானது பொறியியலாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ செயலணியினரின் அனுமதிக்கேற்பவே ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பேரிடரினால் பாதிக்கப்பட்ட தெல்தோட்டைப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர், தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.
அத்துடன் தெல்தோட்டை ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசல் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் கள விஜயம் மேற்கொண்டார்.
இதில் முஹ்சீன் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எம். எம். ஏ. இஸ்மாயீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
















