பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார்.
இந்தப் பகுதிகளில் மின் கட்டணங்கள் செலுத்தப்படாது விட்டாலும் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் இந்தக் காலகட்டத்தில் எந்த மின் துண்டிப்பும் மேற்கொள்ளப்படாது என்றும் அவர் கூறினார்.
சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மின்சார சபையும் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் இதை மதிப்பிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
















