கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை எல்லேபொல பிரதேசத்தில் மூன்று பேருந்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
பெல்மடுல்லவிலிருந்து பலாங்கொடை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான மற்றுமொரு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

















