இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவுக்கு இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் இஸ்ரேலில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அங்குள்ள இலங்கையர்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகக் கூறி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனைக் கவனத்தில் எடுத்த வெளி விவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர குறித்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.


















