அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மதியம் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த அதிகாரி பணிக்கு வந்த பின் தனது துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி வெடித்தது அவரது ஒரு காலில் தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் பலபிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரது நிலை மோசமாக இல்லை என்று வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


















