-ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இடித்துரைப்பு-
மக்களுக்கு கௌரவமான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து கட்டமைப்புகளில் துரிதமான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான போக்குவரத்துச் சேவையாக மாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரப் போட்டித்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம், சமூக சமத்துவம் மற்றும் பிரவேசம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 05 தூண்களின் கீழ் போக்குவரத்து அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள மூலோபாயத் திட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

















