போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சுமார் 300 ஆலோசகர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த மறுவாழ்வுத் திட்டத்திற்காகத் தொண்டர் சேவையாளர்களைக் கொண்ட ஆலோசகர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். தற்போது 750 பேர்களைக் கொண்ட ஆலோசகர்களின் தொண்டர் சேவைக் குழு தயாராகவுள்ளனர்.
இவர்களில் சுமார் 300 பேர் தேவைப்படும் நேரங்களில் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக ஆலோசனை வழங்க ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு ஈடுபடுத்தப்படும் நபர்களுக்குச் சில சலுகைகள் அல்லது கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இளைஞர்களின் பெற்றோர்களையும் அழைத்து, ஆலோசகர்களுடன் கலந்துரையாடிய பின்னரே மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


















