கோவாவில் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில், கடற்படையினருடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடி மகிழ்ந்தார்.
அந்த நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றுகையில்:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். கடற்படையினருடன் தீபாவளி கொண்டாடுவது எனது பாக்கியம். எனது ஒருபுறம் கடலும், மறுபுறம் இந்தியத் தாயின் துணிச்சலான படையினருடைய பலமும் உள்ளது.
ஆப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன். கடற்படை, விமானப்படை கூட்டு முயற்சி தான் பாகிஸ்தானை விரைவாக சரணடையச் செய்தது.
2014 ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை, ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், இந்திய பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















