போர்த்துக்கீச காலனித்துவ ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பண்டைய கலைப் பொருட்களை மீள பெறுவது தொடர்பில் ஆராய்வதற்கு இரு நாடுகளினதும் கூட்டு குழுவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் – போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் பாலோ ரேஞ்சல் இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றபோது. மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வரலாற்று மதிப்புள்ள பொருட்களை திருப்பி அனுப்பும் திட்டம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று ரேஞ்சல் இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு கூட்டுக் குழு ஒரு முதற்கட்ட ஆய்வை மேற்கொள்ளும் என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு ஏற்கனவே உள்ள கலாச்சார ஒப்பந்தங்களை செயல்படுத்துவது குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.


















