போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டு பிரஜையொருவர் நேற்று வியாழக்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட செனகல் நாட்டு பிரஜை பிரேசில் நாட்டுப் போலிக் கடவுச்சீட்டை வைத்திருந்ததாகவும், அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளுக்கமைய, குறித்த பிரேசிலிய கடவுச்சீட்டு போலியானதென தெரியவந்துள்ளது.
பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த செனகல் கடவுச்சீட்டையும், நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமானப் பயணச்சீட்டையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


















