களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி, பள்ளத்தில் விழுந்து இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த கார் குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளாகியது.

காரில் மூன்றுபேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் காயங்களுக்குள்ளாகி, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகியதால் இடம்பெற்றுள்ளதாகவும், மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் பகுதியில் அதிகளவான வளைவுகள் காணப்படுவதால் வாகனங்களை மிக அவதானமாக செலுத்துமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
















