மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 பேர் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கன மழையினால் ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 271 குடும்பங்களும், எறாவூர்பற்று பிரதேச செயலர் பிரிவில் 103 குடும்பங்களும், கோரளைப் பற்று தெற்கு பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களும், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலர் பிரிவில் 13 குடும்பங்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பமும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.


















