நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ள தாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலி, கம்பஹா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















