மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறும் பயணிகளிடமிருந்து அறவிடப்பட்டுவரும் புறப்படுதல் வரியை நீக்கி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வரியில் இருந்து இன்று (29) முதல் அடுத்த ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி வரையில் விலக்களிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் மற்றும் புதிய நிலையான சர்வதேச விமான சேவைகளை ஈர்ப்பதற்கு இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, மத்தல ராஜபக்~ சர்வதேச விமான நிலையத்திற்கு நிலையான நேர அட்டவணையுடன் பயணங்களை செயற்படுத்தும்
விமான சேவைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த புறப்படுதல் வரி 2027 ஜூன் மாதம் வரையில் விலக்களிக்கப்பட்டுள்ளது.


















