மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மோதல் சூழலானது இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரியளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தாதென தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 6 சதவீதமே மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றது. இந்த மோதல்களின் ஆரம்ப சில மாதங்களில் ஏற்றுமதியில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ள போதிலும், அது பாரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தாது.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து அதிகளவில் தேயிலையே ஏற்றுமதி செய்யப்படுவதால் தேயிலை தொடர்பான தொழில்துறையில் சில சவால்கள் எழக்கூடும் என்றாலும், இது சர்வதேச ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்பதால் இந்த மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்க முடியும் என்றார்.


















