சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போது 115 பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக இயங்கி வருகின்றன. குறித்த சேதங்கள் தீவிரமானவை மற்றும் பகுதியளவு என இரு வகைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களாக இயங்கும் பாடசாலைகள் தவிர ஏனைய பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















