கம்பஹாவில் மீரிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரேந்தபொல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகம, ரேந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மனைவியே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















