மன்னார், பேசாலை வெற்றிச் சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில், பேசாலை பிரதேச வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை இரத்ததான முகாம் இடம்பெற்றது.

காலை 9 மணி தொடக்கம், மாலை 4 மணி வரை குறித்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு அமைவாகவும், மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையிலும் குறித்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இரத்ததான முகாமில் பேசாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் உள்ளடங்கலாக சுமார் 100 பேர் வரையில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். குறிப்பாக பேசாலை பகுதியை சேர்ந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் இரத்ததானம் செய்தனர்.


















