மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக மன்னார் பிரதான பாலம் மற்றும் கோந்தைபிட்டி கடற்கரைப் பகுதிகளில் தரித்து வைக்கப்பட்ட ரோலர் மீன்பிடி படகுகள் நீரில் மூழ்கிய நிலையில், அந்தப் படகுகளை மீட்கும் பணி நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
உள்ளூர் மீனவர்கள் மற்றும் ரோலர படகுகளின் உரிமையாளர்கள் இணைந்து படகுகளை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதும் இதுவரை படகுகளை மீட்க முடியாத நிலையே காணப்படுகிறது.
மன்னார் பிரதான பாலத்தின் ஆழமான பகுதியில் நான்கு ரோலர் படகுகள் முழுமையாக மூழ்கியுள்ளமையால் அவற்றை மீட்கும் பணிகள் வெற்றிகரமாக அமையவில்லை.
இவ்வாறான பின்னணியில் தொடர்ச்சியாக மீனவர்களின் உதவியுடன் படகுகளை மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது. மூழ்கிய ரோலர் படகுகள் பல இலட்சம் ரூபா பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.


















