நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், Broccoli மற்றும் Cauliflower ஆகியவற்றுக்கு அதிக கேள்வி காணப்பட்ட நிலையில், ஒரு கிலோ கிராம் Cauliflower 950 ரூபாய்க்கும், ஒருகிலோ கிராம் Broccoli 750 ரூபாய்க்கும் நேற்று விற்பனையாகியுள்ளது.
அத்துடன், மஞ்சள் மற்றும் சிவப்பு குடை மிளகாய் வகைகள் 700 ரூபாய்க்கும், பச்சை குடைமிளகாய் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கறிமிளகாய் ஒருகிலோ 300 ரூபாய்க்கும், தக்காளி ஒருகிலோ 750 ரூபாய்க்கும் விற்பனை விற்பனை செய்யப்பட்டதுடன், கோவா ஒருகிலோ 110 ரூபாய்க்கும், கரட் ஒருகிலோ 310 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒருகிலோ 80 ரூபாய்க்கும் மற்றும் லீக்ஸ் ஒருகிலோ 160 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
இதேவேளை, உருளைக்கிழங்கு ஒருகிலோ 250 ரூபாய்க்கு நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


















