கொழும்பு, ஒல்கொட் மாவத்தைப் பகுதியில் பஸ் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
ரயில் தலைமையகத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

















