முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவுகளின் கொள்முதல் நடவடிக்கைகள் குறித்து அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தினால் தடயவியல் கணக்காய்வு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை விடுத்தார்.


















