இயற்கைப் பேரழிவு காரணமாக பல்வேறு துறைகளில் ஏற்பட்ட சேதம் மற்றும் மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
உலகளாவிய பேரிடருக்குப் பிந்தைய சேத மதிப்பீட்டை (GRADE) நடத்துவதற்கு உலக வங்கி ஏற்கனவே பணிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் இரண்டு வாரங்களுக்குள் புசுயுனுநு மதிப்பீட்டைப் பெற அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பேரழிவால் சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் போன்ற நாட்டின் அத்தியாவசிய உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வளங்களைத் திரட்ட, பொது மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைத்து, நடுத்தர மற்றும் நீண்ட கால மீட்புத் திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அதன்படி, அனைத்து துறைகளின் பங்களிப்புகளையும் கொண்ட ஒரு நிதியை நிறுவவும், நிதியின் நிர்வாகத்தை மேற்பார்வையிட அமைச்சரவை ஒப்புதலுடன், பொது மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கூட்டு மேலாண்மைக் குழுவை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.


















