-மோடிக்கு தமிழ்த் தரப்பு கடிதம்-
தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த பின்னணியில், இன்னமும் மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படாமை குறித்தும், அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்துவதற்கு தமிழ்த்தலைவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
அதனடிப்படையில் நாளை செவ்வாய்க்கிழமை குறித்த கடிதத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் நேரில் கையளிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இக்கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு தளங்களிலும் இந்தியா பகிரங்கமாக வலியுறுத்திவரும் நிலையில், அவ்வழுத்தத்தைத் தொடர்ந்து பிரயோகிக்குமாறு கோரவிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அதேபோன்று தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த பின்னணியில், இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்தும், அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


















