-த.அம்பிகாவதி-
உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கின்ற பாடசாலையின் பழைய மாணவன் தவராசா சுபேஸ் 5 இலட்சத்து 5,000 ரூபா பெறுமதியான சட்டவேலி (Hurdles) ஓட்டத்துக்கான உபகரணங்களை வழங்கியுள்ளார்.
மேற்படி விளையாட்டு உபகரணங்கள் பாடசாலை முதல்வர் ந.தேவராசாவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.


















